சசிகலா சிகிச்சைக்காக பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதி.

பெங்களூரு, 

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர். 

இந்நிலையில் சசிகலாவுக்கு ஏற்பட்டது சாதாரண சுவாச கோளாறு தான் என சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு சசிகலாவை அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ளார். இந்த உடல் நலக்குறைவால் அவரது விடுதலை தேதியில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

சசிகலாவுக்கு கடந்த ஒருவாரமாக காய்ச்சல் இருந்ததாக சிறை நிர்வாகம் தரப்பில் கூறினார்கள்; ஆக்சிஜன்அளவு குறைந்ததாகவும் எனக்கு தகவல் தெரிவித்தார்கள்.  சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூரு சிறை நிர்வாகம் கூறியுள்ளது என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.

செய்தியாளர் ரஹ்மான்