உலகப் பாவை – தொடர் – 20
20. யாரும் அடிமை இல்லை
யாருக்கும் யாரும் இங்கே அடிமையே இல்லை என்று பாருக்குள் வாழ்வோர் நெஞ்சில் பதிந்திடவே வேண்டும் நன்று;
பேருக்கு மனித ராகிப்
பிறர்க்கடிமை ஆனோர் எல்லாம் வீறுற்று விலங்கொ டித்து மேதினியில் உரிமைக் காற்றை
நேருக்கு நேராய் நின்று நுகர்ந்திட்டால், ஒருமைப் பாட்டின்
வேருக்கு நீராய் அன்னார் விளங்குவது திண்ணம்; மண்ணில்
வீறுற்றான் கடைசி மாந்தன் விலங்கொடித்தான் என்ற சேதி ஊருலகில் ஒலிக்க வேண்டி உலாவருவாய் உலகப் பாவாய்!
பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்