4 – நாட்கள் போக்குவரத்து மாற்றம்?
தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
4- நாட்கள் போக்குவரத்து மாற்றம்?
குடியரசு தினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் வரும் 20 -ம் தேதி மற்றும் 22 -ம் தேதி மற்றும் 24 -ம் தேதி, மற்றும் 26 -ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட நான்கு நாட்களிலும் காலை 6 முதல் 10 மணி வரை காமராஜர் சாலையில் வாகனங்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாலாஜா சந்திப்பு மற்றும் அண்ணாசாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அகிம்சை மற்றும் புரட்சி வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியை தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள் குடியரசு தினம் ஆகும்.
இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் நமக்கான சட்டத்தை நாமே வரையறுத்து மக்களாட்சியை மலரச் செய்ததை பெருமைப்படுத்தும் வகையில், குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஒவ்வொரு மாநிலத்திலும், இந்திய தேசியக் கொடி பட்டொளிவீசி பறக்கவிட்டு குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.