மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் சந்திப்பு!
டெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர் டெல்லி சென்றடைந்தார்.
டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் தலைமை செயலாளர் சண்முகம், முதலமைச்சரின் செயலாளர்கள் உட்பட அதிகாரிகள் சென்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.
தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து நாளை காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் அவர், தமிழகத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்கள், நிதியுதவி குறித்து கோரிக்கை மனுவை அளிக்கிறார்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.