நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் – 9

நாட்டு மருந்து! நல்ல மருந்து!

 

கடந்த (8) பகுதியில் நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் மருத்துவ குணம் நிறைந்த, உணவு பொருட்களை பற்றி விரிவாக இனி பார்ப்போம் என்று நான் பதிவு செய்திருந்தேன்.

 அதற்கு முன், நாம் உணவு உண்ணும் முறையை தெரிந்து கொண்டால் சிறப்பாக இருக்கும். மேலும் நாம் உணவு உண்ணும் முறை மாற்றத்தால் ஏற்படும் விபரீத விளைவுகளை, ஆங்கில மருத்துவம் என்று சொல்லும் அலோபதி மருத்துவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்துக் கொண்டார்கள்…!

அதற்கான மருந்துகளையும் உற்பத்தி செய்து தற்போது மருத்துவ சந்தையில் அமோகமாக விற்பனையும் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…!

நமது உழைப்பு…. உழைப்பால் கிடைத்த ஊதியம் அதாவது நாம் சம்பாதித்த பணம் முழுவதும் மருத்துவமனைகளுக்கும், டாக்டர்களுக்குமே கணிசமான காணிக்கையாக நாள் தோறும் சென்று கொண்டிருக்கின்றது…!

சுவை என்பது உயிர்சக்தி…! அதாவது நாம் உண்ணும் உணவின் சுவையில் இருப்பதுதான் உயிர்சக்தி…!

சுவையை உணரும் ஒரே உடல் உறுப்பு…?

நமது நாக்கு மட்டுமே..!

உணவை உண்ணும் போது உருவாகும் உமிழ்நீர் தன் நமது உணவை நன்கு ஜீரணம் செய்யும் உயிர்சக்தி…!

இறைவன் தந்த முத்துப் போன்ற பற்களால் உணவுகளை நன்கு மென்று அரைத்து நாவினால் உருவாகும் உமிழ்நீருடன் சுவைத்து கூழாக்கி குடித்தால், வயிற்றில் இருக்கும் இரைப்பைக்கு நாம் சாப்பிட்ட உணவை அரைக்கும் வேலை குறையும்…!

இதனால் செரிமானம் எளிதாக நடைபெறும்.

இன்று பலர் உணவின் சுவை என்னவென்று உணராமலேயே, அறியாமலேயே, உணவை விழுங்கி வருகிறார்கள்.

இதன் காரணமாக ஜீரண சக்தி குறைந்து வாய்வு (கேஸ்) உற்பத்தியாகி அதன் மூலமாக பலவிதமான வியாதிகள் நமக்கு பரிசாக கிடைக்கிறது.

உணவு உண்ணும் போது சுவை எனும் உயிர் சக்தி உருவாக வேண்டு மென்றால்…?

 உமிழ்நீர் உற்பத்தி ஆக வேண்டும்.

 உமிழ்நீர் உற்பத்தி ஆக வேண்டும் என்றால்..?

உணவை கவனித்து சுவைத்து சாப்பிட்டால் மட்டுமே உமிழ்நீர் உற்பத்தியாகும்.

உணவு உண்ணும் முறையைப் பற்றி பலவிதமான தமிழ் பழமொழிகள் உள்ளன.

 அதில் ஒரு சில பழமொழிகளை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்…!

பசிக்கு உண்பவன் பலசாலி..!

ருசிக்காக உண்பவன் நோயாளி…!

காலையில் இளவரசனைப் போல் உண்ணவேண்டும்..!

 மதியம் மன்னனைப் போல் உண்ணவேண்டும்..!

 இரவு ஏழையை போல் உண்ண வேண்டும்…!

ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி, இரண்டு வேளை சாப்பிடுபவன் போகி…!

மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி…!

மேலும் சாப்பிடும்போது கைப்பேசியை கவனிக்காமல், டி.வி பார்க்காமல், புத்தகம் படிக்காமல், வெட்டி அரட்டை அடிக்காமல், பேசாமல் அமைதியாக உணவை நன்கு மென்று அரைத்து கவனித்து சாப்பிட வேண்டும்.

அப்படி சாப்பிட்டால் மட்டும் தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கான உயிர் சக்தி கிடைக்கும் என்கிறது சித்த மருத்துவ குறிப்புகள்…!

மேலும் நமது நாக்கின் அருமை பெருமைகளை பற்றியும் உமிழ்நீரின் சிறப்பு பற்றியும் இனி பார்ப்போம்.

எதையும் வருமுன் காப்போம்..!

 நல்ல (உணவு)மருந்து…!

 நமது நாட்டு (உணவு)மருந்து..!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி…

 73 73 14 11 19