வாஷிங்டன் செல்லும் பேருந்துகளின் சேவைகளை நிறுத்துவதாக அறிவிப்பு?

நியூயார்க்: பேருந்து சேவை நிறுத்தம்…அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக வாஷிங்டனுக்குச் செல்லும் பேருந்து சேவைகளை நிறுத்துவதாக முன்னணி பேருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

டிரம்ப்பின் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் இறங்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்று முதல் வரும் 20ம் தேதி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என கிரே ஹாண்ட், மெகாபஸ்,போல்ட்பஸ், பீட்டர் பான், ஹையாட், ஹில்டன், மேரியட் ஆகியவை அறிவித்துள்ளன.

இவை தவிர பாதுகாப்புக் காரணங்களுக்காக வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள கடைகள், வணிக வளாகங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.