மக்கள் சென்னையில் கடும் வாகன நெரிசல்

விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் மக்கள் சென்னையில் கடும் வாகன நெரிசல்!

பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

பெரும்பாலும் சென்னையில் வசித்து வரும் வெளியூர் மக்கள் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட சமயங்களில் சொந்த ஊருக்கு செல்லுவது வழக்கம். இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்காக ஏராளமானவர்கள் சொந்த ஊர் சென்றிருந்தனர். விடுமுறை முடிந்து நாளை பணிக்கு செல்ல வேண்டும் என்பதால் பலர் சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். இதனால் சென்னை புறநகரில் இருந்து போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் டோல்கேட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன .

வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வழக்கமாக திறக்கப்படும் 6 கவுன்டருக்கு பதிலாக கூடுதலாக இரண்டு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு 8 கவுன்டர்கள் வழியாக வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கார் உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதால் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை கடக்க அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆவதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர் . இதேபோன்று மதுராந்தகம் அருகே இரு தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கவரி சாவடியில் சென்னை To திருச்சி, திருச்சி To சென்னை ஆகிய இரு தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் வாகனம் ஸ்தம்பித்துள்ளது. உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்