பேரறிஞர் அண்ணாவின் அரசியல் சாணக்கியம்….


திமுக வின் மிக முக்கியமான உச்ச நட்சத்திரமாக மக்கள் திலகம் எம்ஜியார் அவர்கள் இருந்த போது அவ்வாண்டு ஜூலை 15 அன்று பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 62வது பிறந்த தினம் காங்கிரஸால் கொண்டாடப்பட்டது. அவ்விழாவிற்கு முன்னாளில் காங்கிரஸ் தொண்டராக இருந்த எம்ஜியாருக்கும் அழைப்பு விடுத்தது காங்கிரஸ். எம்ஜியார் திமுக வில் இருந்தாலும் காமராஜர் மீது எப்போதும் மிகுந்த மரியாதை உடையவர்.இதை அண்ணாவும் நன்கறிவார்.
அவ்விழாவில் காமராஜரே என் தலைவர்,அண்ணா என் வழிகாட்டி என எம்ஜியார் பேச,இது திமுக வில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் போர்க்கொடி தூக்கவே, கட்சித்தலைவர் அண்ணாவோ எம்ஜியார் மீது எவ்வித நடவடிக்கையை,அறிக்கையோ விடுக்கவில்லை.அப்போது தமிழ் நாட்டில் திமுக வும்,காங்கிரஸூம் தான் வலிமை நிறைந்த கட்சிகளாக இருந்தன.
அந்நேரத்தில் எம்ஜியாருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் “எம்ஜியார்” என்ற மூன்றெழுத்து மந்திரத்தை காங்கிரஸ் கட்சி தந்திரமாக வளைத்துப்போட்டிருக்கும்.மக்கள் சக்தி எம்ஜியாரை இழக்க அண்ணா தயாரில்லை.
பின்னாளில் எம்ஜியார் என்ற மூன்றெழுத்தில் அண்ணா வைத்திருந்த மிகப்பெரிய சாணக்கியம் அர்த்தமுள்ளதாகவே வெற்றியாக அமைந்தது.

செய்தியாளர் விக்னேஸ்வரன்