நம்ம நாட்டு மருந்து! -தொடர் – 8

நமது பாரம்பரிய உணவு கலாச்சாரம் முறைகளை மாற்றி அமைத்துக் கொண்டதன் விளைவாக இன்றுவரை ஏற்பட்டு வரும் வியாதிகளை, அதன் விளைவாக ஏற்படும் வலிகளையும், மக்கள் எப்படி மறந்து வாழ்கிறார்களோ என்பது தான் ஒரு ஆச்சர்யமான கேள்வி..?

அப்படியாக அந்தந்த மண்ணின் மைந்தர்கள் தங்களின் உணவுக் கலாச்சார முறைகளை மாற்றிக் கொண்டதற்கான முக்கிய காரணம் அதீதமான அறிவியல் விளம்பரங்களே.

இது பற்றி பலரும் பலவிதமாக தெளிவாகவும், எழுதியும், சொல்லியும் வருகிறார்கள்.

இருந்த போதும் காபி, டீ, சிகரெட் பீடி, மற்றும் மது போதைக்கு அடிமையானவர்களை போல், சுவை போதைக்கு…. அடிமையான மனிதர்களை மாற்றுவது என்பது சற்று கடினம் தான்.

இருந்தாலும் சொல்லி வைக்க வேண்டிய கடமை, மனித நாகரிகத்தின் கடன் அல்லது கடமை…!

அறிவியல் முன்னேற்றத்தால் போக்குவரத்து, தகவல் தொடர்புகளும் துரிதகதியானது.

எனவே நமது ஆரோக்கியம் சுருங்கிப் போனது.

தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் எனும் வாத்தியார்…. உலக மக்களுக்கு சரியான பாடத்தை புகட்டி உள்ளார்.

இந்த மண்ணின் மைந்தர்கள் அவரவர் மண்ணின் கலாச்சார உணவியல் முறையில், மனம் மாறினால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

நமது முன்னோர்கள் உணவுப் பதார்த்தங்களை மட்டும் குறிப்பிட்டு செல்லவில்லை.

எந்தெந்த பாத்திரத்தில் சமைத்தால் எந்த மாதிரியான ஆரோக்கிய பயன்கள் என்பதையும் சிறப்பாக குறிப்பிட்டு உள்ளனர்.

பச்சைக் காய்கறி, பழங்களை உண்டுவந்த மனிதர்கள் அறிவியல் நாகரீக முன்னேற்றத்தால் ஆவியில் வேகவைத்து தண்ணீரில் கொதிக்கவைத்து மற்றும் எண்ணெயில் வறுத்தும் பொறித்தும் சமைத்து உண்ணும் முறைக்கு தங்களை மாற்றிக் கொண்டனர்.

முதலில் கல் பாத்திரங்கள் பின்னர் மண் பாத்திரங்கள், இவைகளில் சமையல் செய்யும் போது அனைத்து வகையிலும் ஆரோக்கிய சிறப்பு.

இரும்பு பாத்திரங்களில்சமைக்கும் போது அந்த உணவானது உடல் வெப்பத்தை தணித்து,சோகை நீக்கி உடல் நலம் பெற வைக்கிறது.

இரும்புச் சட்டியில் தாளிக்கும் போது அதில் சாதத்தைப் போட்டு பிசைந்து சாப்பிடும்போது உணவில் வாசம் அதிகரிப்பதுடன் இரும்பு சுவை கூடுதலாக கிடைக்கும்.

தாமிர பாத்திரங்களில் உணவு சமைக்கும் போது அது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும், தாமிர பாத்திரங்களில் தயாரிக்கப்பட்ட தேநீரை அருந்தும் போது அது ஒருவிதமான சுவையுடன் உடலில் உள்ள கிருமிகளை நீங்கும், வெண்புள்ளி ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு போன்றவை நீங்கும்.

இதுபோல பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீரை காய்ச்சி குடிக்கும் போது தாகம் குறைந்து உடல் வலுப்பெறும், நீர்க்கடுப்பு உள்ளவர்களுக்கு பித்தளை பாத்திரத்தில் காட்சியை தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சி அடையச் செய்யும்.

ஈயப் பாத்திரம் அல்லது ஈயம் பூசப்பட்ட பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டால் தோல் தொடர்பான நோய்கள், கண் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் இதில் உணவு சமைக்கும் போது வாசனை மிகுந்து இருக்கும் சுவையும் அதிகமாக இருக்கும்.

அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகும் ஆனால் அது உடம்புக்கு நல்லது அல்ல..

அலுமினிய பாத்திரத்தில் புளிப்பான அதாவது புளி, தக்காளி, எலுமிச்சை போன்ற புளிப்பு சுவையுள்ள உணவுகளை சமைப்பது கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இப்படியாக பாத்திரத்தில் சமைக்கும் போது ஏற்படக்கூடிய வேதியல் மாற்றங்களைக் கூட நமது முன்னோர்கள் துல்லியமாக சொல்லி வைத்துள்ளார்கள், என்றால்… அவர்கள் நமக்கு உணவு உண்ணும் முறையிலும் உணவிலுள்ள அருமை பெருமைகளை தப்பும் தவறுமாக மாற்றியா சொல்லி இருப்பார்கள்…?

நான் மேலே சொன்ன விவரங்களை நீங்கள் அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள் ஆனால் அதை சற்று மறந்து இருப்பீர்கள் அதை நினைவுபடுத்தும் அதற்காகத்தான் இந்தப் பதிவு.

நாம் மேற்கொண்டு நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் மருத்துவ குணம் நிறைந்த பொருட்களை பற்றி விரிவாக இனி பார்ப்போம்.

நோய்கள் வரும் முன் காப்போம்.

நல்ல (உணவு) மருந்து…!

 நம்ம நாட்டு (உணவு) மருந்து…!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119