தி.மு.க. வெற்றி பெறும் – மு.க.ஸ்டாலின் பேச்சு
வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெரும். அ.தி.மு.க. எதிர்கட்சியாகக் கூட வராது என்று முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியினர், தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தில் விரைவில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இன்னும் 4 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.
தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் விரும்புகின்றனர்.
கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவர் ஆக்கிவிட்டது. தேர்தல் நெருங்குவதால் பொய்யான விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் 19-வது இடத்திற்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
வருகிற பொது தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி வாகை சூடும் நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. எதிர்கட்சியாகக் கூட வராது.
இவ்வாறு அவர் பேசினார்.
செய்தியாளர் ரஹ்மான்
தமிழ்மலர் மின்னிதழ்