கமல்ஹாசன் ஓய்வு தேவைப்படுகிறது என அறிவிப்பு !!!
சென்னை : காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்தேன். ஏற்கனவே செய்த அறுவை சிகிச்சை தொடர்ச்சியாக மற்றொரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.
காலில் சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன். மக்களை நேரில் சந்திக்க இயலாது என்றாலும் வீடியோ வழியாக பேசுவேன்” என்று தெரிவித்துள்ளார்.