அவசரமாக தரையிரங்கிய பெங்களூரு விமானம்?

போபால்: சூரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி 172 பயணிகளுடன் சென்ற விமானம் போபால் விமான நிலையத்தில் அவரசமாக தரை இறக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் அவரசமாக தரை இறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு நோக்கி 172 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. நடுவானில் சென்றபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த விமானம் மத்திய பிரதேச மாநிலம் போபால் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

இது தொடர்பாக போபால் விமான நிலைய இயக்குனர் கூறுகையில், தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் சூரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விமானம் 172 பயணிகளுடன் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று கூறினார்.