மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் சாமி தரிசனம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க வந்த முதல்வர் கே.பழனிசாமி, நேற்று மதியம் அமைச்சர்களுடன் சென்று மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடந்த கரோனா தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சி மற்றும் முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏவின் திருமண மண்டபம் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் கே.பழனிசாமி மதுரை வந்தார்.

அவர் காலையில் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ. விவி.ராஜன் செல்லப்பா ஆகியோருடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு மதியம் 12.15 மணியளவில் சென்றார்.

முதல்வர், அமைச்சர்களை இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் கோயில் அதிகாரிகள் வரவேற்றனர்.
அதன்பின் சுமார் 20 நிமிடங்களில் சாமி தரினம் செய்த முதல்வர் கே.பழனிசாமி, அமைச்சர்களுடன் அங்கிருந்து சென்னை புறப்பட்டுச் செல்வதற்கு மதுரை விமானம் நிலையம் சென்றார். பின் அங்கிருந்து விமானம் மூலம் மதியம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.