நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 6


எதையும் நாம் புதியதாக கண்டுபிடித்து சொல்லிவிடவில்லை.

நமது முன்னோர்கள் எழுதி வைத்த மூலிகை குறிப்புகளில் இருந்து தொகுக்கப்பட்டவையே…!அந்த வகையில் வாழைப்பூ மருத்துவ பயன்களைப் பற்றி பார்க்கலாம்..!

வாழைப்பூ பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது….வாரம் மொருமுறை வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும். மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச்செய்யும்

மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும் ஒரு சிறந்த இயற்கை உணவாக வாழைப்பூ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வரமொருமுறை அல்லது இருமுறை வாழைப்பூ சாப்பிட்டு வர நீண்ட நாட்காளாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். வயிற்றில் நீர் சத்து குறைபாட்டால் மலம் இறுகி போவதை வாழைப்பூ தடுக்கும்.

அல்சர் என்பது வயிறு மற்றும் குடல்களில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய ஒரு புண் ஆகும். இந்த அல்சர் பெரும்பாலும் காலை உணவுகளை தவிற்பவர்களுக்கும், அதிக கார உணவுகளை அடிக்கடி உண்பவர்களுக்கும் ஏற்படும் வாரத்திற்கு ஒருமுறை வலைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உணவை சாப்பிட்டு வந்தால் இந்த அல்சர் புண்கள் கூடிய விரைவில் குணமாகும். வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் செயல்பாடுகளையும் சீரமைக்கும்.

வாழைப்பூவில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதய நலத்திற்கு பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர அடிக்கடி வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்

கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு அதீத வயிற்று போக்கு ஏற்படுகிறது. இந்த வயிற்றுப்போக்கால் உடலின் அத்தியாவசிய சத்துக்கள் இழப்பு உண்டாகிறது. வாழைப்பூவை வயிற்றுப்போக்கு நின்ற பிறகு பக்குவம் செய்து சிறிய அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெற முடியும்.

மனிதர்கள் அனைவருக்கும் கண்பார்வை என்பது மிகவும் அவசியம். எனவே நமது கண்பார்வை திறனை நலமாக வைத்து கொள்வது நமது பொறுப்பாகும். வாழைப்பூவில் வைட்டமின் எ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.

வாழைப்பூவை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. பலருக்கு ஊட்டச்சத்தின்மையால் ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது போன்ற அனைத்து பிரச்னைகளையும் வாழைப்பூ தீர்க்கிறது.

மலச்சிக்கல், ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மூலம், பவித்திரம் போன்றவை ஏற்பதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. மூலம் ஏற்பட்டவர்கள் விரைவில் குணமாக வாழைப்பூ உதவுகிறது. இதில் இருக்கும் சத்துகள் மலச்சிக்கல் பிரச்னையை போக்கி, மூலம் காரணமாக ஏற்பட்ட புண்களை வெகு விரைவில் ஆற்றுகிறது.

நமக்கு ரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். இந்த ரத்த சோகை குறைபாடு குழந்தைகள், பருவ வயதினர் போன்றோரிடத்தில் அதிகம் இருக்கிறது. வாரமொரு முறை வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் ரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வாழைப்பூ சிறப்பான உணவு..

எதையும் வருமுன் காப்போம்…!

நல்ல மருந்து….!
நம்ம நாட்டு மருந்து…!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119
மூலிகை தகவல்கள்:- சங்கரமூர்த்தி…. 7373141119