உலகப் பாவை – தொடர் -16
16.இல்லாமை
இல்லாதாகுக
இல்லாமை பாவம் அன்று; இருக்கின்ற சிந்த தனைகள் எல்லாமும் ஏழ்மை தன்னை இல்லாமல் ஓட்டும் பார்வை
இல்லாதாய் இருப்ப தற்கே இல்லாமை அரிய சான்று; இல்லாமை இருக்கும் மட்டும்
ஏதிங்கே ஒருமைப் பாடு?
உள்ளார்க்கிங்(கு) உழைப்பிற்
கேற்ற
உணவாம்எனச் சட்டம்
வைத்தால்
இல்லாமை இல்லா தாகும்
எழும்உலக ஒருமைப் பாடு;
இல்லாமை இல்லா தாக்க ஏற்றனவை உலகோர்க் கெல்லாம்
வல்லவகை புகட்டி இன்றே
வலம்வருவாய் உலகப் பாவாய்!
பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்