பிரதமர் மோடி அதிரடி திட்டம்!இன்று தொடக்கம்!

பிரதமரின் திறன் இந்தியா திட்டம் மூன்றாம் கட்டமாக இன்று நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மூன்றாம் கட்ட திறன் இந்தியா திட்டத்தின் கீழ், 2020-2021ஆம் ஆண்டில் எட்டு லட்சம் பேருக்கு, ரூ.948.90 கோடி செலவில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

729 பிரதமரின் திறன் மையங்கள், பட்டியலில் உள்ள இதர பயிற்சி மையங்கள் மற்றும் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ள 200க்கும் மேற்பட்ட ஐ.டி.ஐ.க்கள் ஆகியவை திறமையான தொழிலாளர்களை உருவாக்க பயிற்சியை அளிக்கவுள்ளன.

முதல் மற்றும் இரண்டாவது பிரதமரின் திறன் இந்தியா திட்டங்கள் மூலம் கற்ற அனுபவங்கள் அடிப்படையில் , திறன் மேம்பாட்டு அமைச்சகம் , மூன்றாவது பயிற்சித்திட்டத்தை புதிதாக மேம்படுத்தியுள்ளது .

இது தற்போதைய கொள்கைகளுக்கு பொருந்தும் வகையிலும் , கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட திறன் சூழலுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் உள்ளது .

திறன் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார் . இந்தியாவை உலகின் திறன் தலைநகராக ஆக்கும் தொலைநோக்கை எட்டுவதற்காகத் தொடங்கப்பட்ட பிரதமரின் திறன் இந்தியா திட்டம் அதி வேகத்தை அடைந்துள்ளது .

மூன்றாவது திறன் இந்தியா திட்டத்தை மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே , இணையமைச்சர் ராஜ்குமார் சிங் முன்னிலையில் இன்று தொடங்கி வைக்கவுள்ளார் .

இந்நிகழ்ச்சியில் மாநில திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் உரையாற்றவுள்ளனர் .

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.