சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் வசிப்பவர்கள் பொங்கல் கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் வசிப்பவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், ஒரத்தநாடு, தஞ்சாவூர், மன்னார்குடி,போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து போளூர், திருவண்ணாமலை, வந்தவாசி, சேத்துப்பட்டு, பன்ருட்டி, செஞ்சி, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன

இதனையடுத்து தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ஏராளமான அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்ட காரணத்தினாலும் சென்னையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமான கார்கள் சென்றதாலும் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து காவல்துறையினர் நிலைமையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்

முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்,