கனடா அரசே மிக்க நன்றி!!!

கனடா அரசே மிக்க நன்றி!!! உலகில் தமிழர்களும் , தமிழ் , மொழியும் , பரவிக்கிடக்கின்றது ஆனால் சில நாடுகள் மட்டுமே அதற்கான அனுமதியும் பெருமையும் படுத்தி வருகின்றது அந்த வரிசையில் கனடா அரசு இன்று சேர , சோழ , பாண்டிய சின்னங்களுடன் கூடிய முத்திரையை தமிழ் மொழியில் தை திங்களுக்காக வெளியிட்டுள்ளது. இது உலகில் தமிழ்ர்களுக்கென கிடைத்த பெருமிதம் என்றும் கொள்ளலாம் தமிழையும் தமிழ் மொழியையும் சிறப்பித்த கனேடிய அரசுக்கு அகில உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுமம் சார்பாக திருமதி.சுகந்தி ரவீந்திரநாத் தங்களது நன்றியினை தெரிவித்து வருகின்றார். அவர் கூறுகையில் பிறந்த நாட்டிலே சரியாய் அங்கீகாரம் கிடைக்காமல் போராடும் நிலையில் பசி , பட்டினி , தமிழ் , உரிமை கல்வி , மதம் , சாதி , என்று போராடும் நிலையிலும், நமது வரலாற்று சிறப்பினை மற்றைய நாடுகள், மதிக்கும்போது, உண்மையாக வியக்க வைக்கின்றது. இது வரலாற்று சிறப்பு மிக்க செயலாகும் என பாராட்டி வருகின்றார்.

செய்தி ரவூப்