உலகப் பாவை – தொடர் -15

    15. உலக இலக்கியம் 

நலிவுகளை எழுத்தாய் மாற்றி நல்லனவைக் கேலி யாக்கும்
இழிந்தசரக் கெல்லாம் மண்ணில்
இலக்கியங்கள் ஆவ தில்லை!

பழிப்புகளை நியாய மாக்கிப் பண்புகளை முடமாய் ஆக்கும் கழிப்புகளும் இலக்கி யத்தின் கணக்கெடுப்பில் சேர்தல் இல்லை ;

துளியேனும் பகைமை
போற்றாத்
துணிவிற்கும் வாழ்வில் நைந்த எளியோர்க்கு விழியாய் நிற்கும் ஏற்பிற்கும், ஒருமைப் பாட்டின்

ஒளியாகும் மிடுக்கி னுக்கும்
உரியதிலக் கியமென்
றோதி
வழிகாட்டி விரைவாய்
மண்ணில்
வலம்வருவாய் உலகப் பாவாய்!

பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு, நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்