கேரள மாநில மந்திரி சுனில் குமார் தீர்ப்பை வரவேற்கிறேன், அதே சமயத்தில் குழு அமைத்ததில் சந்தேகம் உள்ளது என தெரிவித்துள்ளார் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 8 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில் வெற்றி கிடைக்கும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வேளாண் சட்டம், வேளாண் போராட்டம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை பிறப்பித்த கோர்ட், மத்தியஸ்தராக ஒரு குழுவை உருவாக்கியுள்ளது.