உலகப் பாவை – தொடர் – 13

       சிந்தனையால்  ஒருமை பூக்கும்

சிந்தனையே மனிதர் தம்மின் சிறப்புரிமை; வாழ்வின் மூச்சு; சிந்திக்க தெரிந்த மாந்தர் செயலால்தான் ஒருமைப் பாடு

முந்தியுருக் கொள்ளும்;

இம்மண்

மூலையிலே ஒருவ ரேனும் சிந்தனையின் முனைம

ழுங்கிச்

செயலற்று வாழ்வா ரானால்

முந்திவரும் ஒருமைப் பாடு முழுமைபெறா தாகை யாலே சிந்தனையைத் தூண்டும்

கல்வி

சிறந்தெங்கும் பாய வேண்டும்;

சிந்தனைச்செம் மணிகள்

எங்கும்

செழித்தோங்க வேண்டும் என்னும்

உந்துதலை விளக்கிக் கூறி

உலாவருவாய் உலக பாவாய்!

பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு, நிறுவனர்

உலகத் திருக்குறள் மையம்