ஜல்லிக்கட்டு போட்டி 6 மாவட்டங்களில் நடத்தலாம்

தமிழக அரசு உத்தரவு_ஜல்லிக்கட்டு போட்டி 6 மாவட்டங்களில் நடத்தலாம்- மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்டு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தில் சில இடங்களில் 15-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கவர்னர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர் ரஹ்மான்