நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் -1

கொரோனா வைரஸ் போன்ற அதிதீவிரமான ஆட்கொல்லி வைரஸ், என்றும் எப்பொழுதும் இந்த பிரபஞ்சத்தில் சுற்றி வலம் வந்து கொண்டே தான் இருக்கிறது.

இது போன்ற உயிர்க்கொல்லி வைரஸ்களில் இருந்து, நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றால் நாம் கண்டிப்பாக நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்த்துக் கொள்வதுதான் சரியான வழியாகும்.

வருமுன் காப்போம் என்கின்ற அடிப்படையான ஒரு வாழ்வியல் தத்துவத்தை நாம் மறந்து கொண்டே இருக்கிறோம்…!

நோய் வருமுன் காக்க வேண்டிய வாழ்வியல் முறையை துறந்து.
நோய் வந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற மன நிலையில் நாம் ஏன் சென்று கொண்டிருக்கிறோம்.

என்பது கூட நமக்கு நாமே புரிந்து கொள்ள முடியாத சூழலில், நமது நவநாகரீகம் நம்முடைய உணவு முறைகளை மாற்றிக் கொள்ள வைத்துவிட்டது.

இதற்குப் பெயர்தான் காலக் கொடுமை என்பது….!

நமது முன்னோர்கள் உணவு பழக்க வழக்கத்தை எவ்வளவு சிறப்பாக முறைப்படுத்தி வைத்துள்ளனர் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்வது நல்லது….!

தற்போதைய சூழலில் நமக்குத் தேவை வைரஸ் நோய் எதிர்ப்பு தன்மையுள்ள மருந்துகள் அல்ல உணவுகளும், உணவு உண்ணும் பழக்கவழக்க முறைகளுமே..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிப்படைந்தவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி இருக்கும் போது. அவர்கள் தினந்தோறும் எதை உண்டு அனுபவித்தார்கள் என்பதை அவர்களது அனுபவத்தை கேட்டாலே போதும் உண்மை விளங்கிவிடும்.

நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கித் தருவதில் வல்லமை கொண்டது நமது முருங்கை கீரை என்பதை, எந்த ஆங்கில மருத்துவ அறிஞர்களாலும் யாராலும் மறுக்க முடியாத உண்மையான பகுப்பு ஆய்வகத்தின் இறுதி முடிவாகும்.

இந்த உண்மையை உலகமே ஒத்துக் கொண்ட பின்பு தான் நம்முடைய வீட்டில் அருகே உள்ள முருங்கை மரத்தின் மீது நமக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் சமீப காலமாக உருவாகி வருகிறது.

இனி வரும் தொடர்களில் முருங்கையின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்.

எதையும் வருமுன் காப்போம்…!

நல்ல மருந்து….!
நம்ம நாட்டு மருந்து…!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119