சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு!

சிறந்த மாடுபிடி
வீரருக்கு கார் பரிசு முதல்வர் துணை முதல்வர் அறிவிப்பு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு, சிறந்த காளை யின் உரிமையாளருக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் கார்கள் பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை அலங்காநல்லூரில் வரும் 16ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோல் விழா நடைபெற்றது. ஜல்லிக்கட்டு கமிட்டி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஜல்லிக்கட்டை பார்க்கும் பார்வையாளர்கள் தனிமனித இடைவெளிவிட்டு அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

பார்வையாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே போட்டிகளை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் ஆர் வி உதயகுமார் கூறியுள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொருத்தவரை மொத்த வீரர்கள் 431 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் உடல் தகுதியோடு 430 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 699 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் உடல் தகுதியோடு 651 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அலங்காநல்லூர் பொருத்தவரை மொத்த வீரர்கள் 683 பேர் பதிவு செய்திருக்கிறார்கள், 655 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.