“யூஸ் சிக்னல்”
உலகின்முதல் பணக்காரராக அமேசான் சி.இ.ஓ, டெல்சா நிறுவனர் எலோன் மஸ்க்கும் “யூஸ் சிக்னல்” என்று சிக்னல் செயலிக்கு பரிந்துரைத்துள்ளார்.
வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. அதாவது, வாட்ஸ் அப் தன் பயனாளர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில் பயனாளர்கள் தங்கள் தொலைபேசி எண், தொடர்பு எண்கள், இருப்பிட விவரம் ஆகியவற்றை பேஸ்புக் உள்ளிட்ட தங்கள் நிறுவன ஊடகங்களில் பகிர அழைப்புவிடுத்தது. அதுவும், பிப்ரவரி 8ம் தேதிக்குள் இந்த Terms and Privacy Policy Updates-க்கு ஏற்றுக் கொள்ளவில்லை எனில் பயனாளர்கள் செயலியில் நுழைய முடியாது என்று கூறப்படுகிறது.
இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் உபயோகிக்கும் அனைவருக்கும் பொருந்தும்.
வாட்ஸ் அப்பின் இந்த முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வாட்ஸ் அப் புதிய தனியுரிமை கொள்கைக்கு (New Privacy Policy) எதிர்ப்பு தெரிவித்து பயனாளர்கள் சமுக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். வாட்ஸ் அப் கணக்கை நீக்கிவிட்டு டெலிகிராமுக்கு மாறுவதாகவும் பதிவு செய்து, ட்விட்டரில் #WhatsappNewPolicy என்ற ஹாஷ் டேக்கை ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர். இதன் காரணமாக பயனாளர்கள் வாட்ஸ் அப்பை விட்டு வெளியேறி மாற்று செயலிகளை பயன்படுத்த நேரிட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. Signal
இந்நிலையில், உலகின் நம்பர் 1 பணக்காரராக அமேசான் சி.இ.ஓ, டெல்சா நிறுவனர் எலோன் மஸ்க்கும் “யூஸ் சிக்னல்” என்று சிக்னல் செயலிக்கு பரிந்துரைத்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். பயனாளர்களின் தனியுரிமையை மையமாகக் கொண்ட சிக்னல் (மெசேஜ் அப்) எனப்படும் மற்றொரு செயலியை பயன்படுத்துமாறு மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த செயலி பரவலாக உள்ளது. இதனை பாதுகாப்பு ஆலோசகர்கள், பத்திரிகையாளர்கள், தனியுரிமை ஆராய்ச்சியாளர்கள் என பல வகையான பயனாளிகள் இந்த சிக்னல் செயலியை பரவலாக பயன்படுத்துகிறார்கள்.
வாட்ஸ் அப் செயலியை போல் (end-to-end encryption) பாதுகாப்பு வசதி கொண்டது. அதாவது, 3rd party apps-ல் உங்களின் விவரங்கள் பகிரப்படாது. எலோன் மஸ்க்கின் பரிந்துரையால், சிக்னல் செயலி புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது என்றும் ஒரு பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் புதிய பயனாளர்கள் அதிகரிப்பதால் செல்போன் எண்ணிக்கை சரிபார்ப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனையால் இந்த அதிகரிப்பு காணப்படுகிறதுஎன்று குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, 2014-ல் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்-ஐ வாங்கியது குறிப்பிடத்தக்கது.
S முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.