4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும், 9-ந்தேதி (நாளை மறுதினம்) தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது