பாக்யராஜின் பிறந்த தினம்!

இன்று நடிகர் கே.பாக்யராஜின் பிறந்த தினம். இந்திய திரையில் சிறந்த ஆளுமை கொண்டவர் திரு. கே.பாக்யராஜ்.இவரது படைப்புகள் அத்தனையும் ஜனரஞ்சகமானது.திரைக்கதை வசனம் அமைப்பதில் நிபுணர்.பாரதிராஜாவின் சினிமா பாசறையில் சினிமாவைக் கற்றுத் தேர்ந்தவர்.இயக்குனர்,கதாசிரியர்,தயாரிப்பாளர்,
கவிஞர்,இசையமைப்பாளர்,அரசியல் துறை என பன்முகத்துறை கொண்டவர் பாக்யராஜ். இவரது படங்களில் “சுவர் இல்லாத சித்திரங்கள்”,புதிய வார்ப்புகள்,
விடியும்வரை காத்திரு,இன்று போய் நாளை வா,கன்னிப் பருவத்திலே,ஒரு கை ஓசை,
தூறல் நின்னு போச்சு,மௌனகீதங்கள்,பாமா ருக்மணி,பொய்சாட்சி,இது நம்ம ஆளு,ராசுக்குட்டி,
டார்லிங் டார்லிங் டார்லிங்,முந்தானை முடிச்சு,சின்ன வீடு,எங்க சின்னராசா,தாவணிக்கனவுகள்,பவுனு பவுனுதான்,சுந்தரகாண்டம்,ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி,நான் சிகப்பு மனிதன் (கௌரவ வேடம்),அன்புள்ள ரஜினிகாந்த் (கௌரவ வேடம்),விதி (கௌரவம் வேடம்)இப்படத்தில் போஸ்ட் மேனாக ஓர் பஞ்சாயத்தில் சினிமா படப்பிடிப்பு நடப்பது போல் அமைந்த நகைச்சுவைக் காட்சியில்
கலக்கியிருப்பார் பாக்யராஜ்.இவரின் கைவண்ணத்தில் உருவான
“அந்த ஏழு நாட்கள் “படத்தில் காதலின் மகிமையையும்,ஓர் பெண்ணின் திருமாங்கல்யத்தின் புனிதத்தையும்,
தமிழ் கலாச்சாரம் சீர்கெடாமல் அமைத்த
விதம் பெரும் வரவேற்பை பெற்றது. “ருத்ரா”
படத்தில் வங்கியை கொள்ளையடிக்கும் காட்சி இன்றளவிலும் நகைச்சுவையுடன்
ரசிக்கக்கூடியது.எம்ஜியார் நூற்றாண்டு விழா இலங்கை கண்டியில் நடைபெற்ற போது அவரை நேரில் சந்தித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டதை நினைவில் கொள்கின்றேன்.அந்நிகழ்வில் பாக்யராஜ் நடுவராக தலைமை தாங்கிய பட்டிமன்றம் சிறப்பாக அமைந்திருந்தது. எவ்வித பந்தா இல்லாமல்அனைவரிடமும் சாதாரணமாகவும்,இயல்பாகவும் இவர் பழகிய விதம் இலங்கை ரசிகர்களை மகிழச்செய்தது.ஒரு “கைதியின் டயரி”படம் ஹிந்தியில் மறுபதிப்பு செய்த நேரத்தில் கமலஹாசன் செய்த வேடத்தை ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமித்தாப்பச்சன் செய்தார். அப்போது பாக்யராஜின் திரைக்கதை அமைப்பைப் பார்த்து பிரமித்த அமித்தாப்பச்சன் இவரை வெகுவாக பாராட்டினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “தாவணிக்கனவுகள் “படத்தில் இணைந்து நடித்ததை தனது வாழ்நாளில் பெரும் பாக்கியமாக கருதுகிறார்.அத்துடன் மக்கள் திலகம் எம்ஜியார் அவர்கள் இவரைத் தனது வாரிசு எனக்கூறியதை சிறப்பாக எண்ணி பெருமை கொண்டவர் என்பதும்
வாழ்த்துக்குரியது. சிறப்புக்குரிய பல விருதுகளையும் அடைந்துள்ளார்
திரு. பாக்யராஜ். தொடர்ந்து
திரு கே.பாக்யராஜின் கலைப்பணி தொடர எமது வாழ்த்துகள்.
இலங்கை ரசிகர்கள் சார்பாக பாக்யராஜ் அவர்களுக்கு எமது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
(எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை )