“சரோஜாதேவி “யின் பிறந்த தினம்..
இன்று கன்னடத்துப் பைங்கிளி “சரோஜாதேவி “யின் பிறந்த தினம்.மக்கள் திலகம் எம்ஜியார்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,ஜெமினி கணேசன்,கன்னட நடிகர் ராஜ்குமார், தெலுங்கு நடிகர்கள் என்.டி.ராமராவ்,நாகேஷ்வரராவ்,
போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் சரோஜாதேவி. மக்கள் திலகத்தின் பல படங்களில் ஆஸ்தான கதாநாயகியாகவும் நடித்தவர்.பல தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமை இவருக்குண்டு. “எங்க வீட்டுப் பிள்ளை “
வெற்றி விழாவின் போது எம்ஜியாருடன் இலங்கை வந்துள்ளார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் “புகழாஞ்சலி”நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் இலங்கை வந்தார். இந்திய திரைவானில் சரோஜாதேவி ஓர் உச்ச நட்சத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை ரசிகர்கள் சார்பாக எமது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நல்வாழ்த்துக்கள்..
எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை