முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்..

முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்.ஈரோடு மாவட்டத்தில்.சென்னை,

முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் இன்றும் நாளையும் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 6-ம் ந்தேதி காலை 9 மணிக்கு பவானியில் பொதுக்கூட்டம். 10 மணிக்கு கே.எம்.பி. மகாலில் சிறு, குறு தொழில் முனைவோருடன் கலந்துரையாடல். 11 மணிக்கு அந்தியூரில் பொதுக்கூட்டம். 12 மணிக்கு வாரி மகாலில் வெற்றிலை கொடி விவசாயிகளுடன் கலந்துரையாடல். பகல் 1 மணிக்கு அத்தானியில் வரவேற்பு. 1.30 மணிக்கு கள்ளிப்பட்டியில் வரவேற்பு. 3.30 மணிக்கு நால்ரோட்டில் வரவேற்பு.

மாலை 4 மணிக்கு சத்தியமங்கலத்தில் எஸ்.பி.எஸ். பெட்ரோல் பங்க் அருகில் வரவேற்பு. 4.45 மணிக்கு நல்லூர் இ.பி.பி. மகாலில் உள்ளூர் பிரமுகர்களுடன் கலந்துரையாடல். 5.30 மணிக்கு பு.புளியம்பட்டியில் வரவேற்பு. 6.30 மணிக்கு பு.புளியம்பட்டி நகராட்சி காந்தி நகரில் உள்ளூர் பிரமுகர்களுடன் கலந்துரையாடல்.7-ம் தேதி காலை 9 மணிக்கு பன்னீர்செல்வம் பார்க்கில் வரவேற்பு. 9.30 மணிக்கு ஈரோடு மாவட்ட கழக அலுவலகம், பாசறை. 10 மணிக்கு மாரியம்மன் கோவில் வீரப்பன் சத்திரத்தில் பொதுக்கூட்டம்.

11.30 மணிக்கு இந்து கல்வி நிலையத்தில் தேனீர். 12 மணிக்கு – சித்தோட்டில் வரவேற்பு. பகல் 12.30 மணிக்கு வில்லரசம்பட்டி திவேபேரர் ரிசார்ட்டில் தொழில் முனைவோர், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல். 2.30 மணிக்கு ஊத்துக்குளியில் வரவேற்பு.

3.15 மணி- சென்னிமலையில் வரவேற்பு. மாலை 4 மணிக்கு ஒடா நிலையில் பொதுக்கூட்டம் மற்றும் மஞ்சள் விவசாயிகளுடன் கலந்துரையாடல். 4.45 மணிக்கு அரச்சலூரில் வரவேற்பு, சிவசக்தி திருமண மண்டபத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் கலந்துரையாடல். 5.30 மணிக்கு அவல்பூந்துறையில் வரவேற்பு.

6.30 மணிக்கு பெருந்துறை ஸ்ரீபிளஸ் மகாலில் கைத்தறி மற்றும் சக்தி தறி தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் மற்றும் உள்ளூர் பிரமுகர்களுடன் கலந்துரையாடல். இரவு 7.30 மணிக்கு பெருந்துறையில் பொதுக்கூட்டம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ரஹ்மான் செய்தியாளர். தமிழ் மலர் மின்னிதழ்