ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2021 இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன.

காளைகளுக்கு மண் குத்துதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை காளை வளர்ப்போர் அளித்து வருகின்றனர். இதன் மூலம் ஜல்லிக்கட்டு திடலில் காளைகள் நின்று விளையாடும். இந்த காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்களும் பயிற்சியை தொடங்கி விட்டனர்.