சென்னை விமான நிலையத்தில்14.00 கோடி ரூபாய் போதை பொருட்கள்

மார்ச் முதல், நாடே முடங்கி கிடந்தாலும், போதைப் பொருட்களை கடத்தும் கும்பல்களின் பணிகள் வழக்கம் போல், சரக்கு விமானங்கள் வாயிலாக, தங்குதடையின்றி நடந்தன. ‘கொரோனா வைரஸ்’ பரவுதலை தடுக்க, ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், ஆமெரிக்கா, எத்தியோப்பியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இயக்கப்பட்ட சரக்கு விமானங்களில், மருத்துவ பொருட்கள் என்ற பெயரில், அதிகளவில் போதை மருத்துகள் மற்றும் மாத்திரைகள் கடத்தப்பட்டன.குறிப்பாக, கஞ்சா பவுடர், ஒப்பியம், ‘காட்’ இலைகள், மெத்தாபேட்டமைன் போன்ற போதைப் பொருட்கள், கடத்தி வரப்பட்டன.சென்னை மண்டல சுங்கத்துறையினர், 2020ம் ஆண்டு, பிப்ரவரி – நவம்பர் வரையிலான, 10 மாதங்களில், 23 வழக்குகளில், ஒரு பெண் உட்பட, 26 பேரை கைது செய்தனர். இதன் மதிப்பு, 14.00 கோடி ரூபாய்.