உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு?

புதிய நாடாளுமன்றக் கட்டடம் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.

சுமார் 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது இதுகுறித்து நடைபெற்று வந்த இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய நாடாளுமன்றக் கட்டடம் பணிகளுக்கான அனுமதியை வழங்கி இருக்கிறது. மூன்று நீதிபதிகள் இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கின்றார்கள். இரண்டு நீதிபதிகளும் இந்த கட்டடத்தை கட்ட அனுமதி வழங்கி இருக்கிறார்கள்.

மற்றொரு நீதிபதி மாறுபட்ட ஒரு தீர்ப்பினை வழங்கி இருக்கின்றார். மொத்தத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் மற்றும் அதை ஒட்டி இருக்கக் கூடிய மற்ற திட்டங்கள், மற்ற கட்டுமான திட்டத்திற்கான அனுமதி என்பது தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல சுற்றுச்சூழல் அனுமதி போன்ற விஷயங்கள் தீர்ப்பின் சாராம்சத்தில் சொல்லப்பட்டுள்ளது. தீர்ப்பின் முழு விவரம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.