ஆரஞ்ச் பழத்தின் பயன்!

ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.

இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும்.

பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிட்டால், பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம்.

வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சுப் பழமானது, உடலில் உள்ள செல்களின் நோயெதிப்பு சக்தியை அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காதவாறு பாதுகாக்கும்.

கரோட்டினாய்டு என்னும் பொருள் ஆரஞ்சுப் பழத்தில் அதிகம் இருப்பதால், அதனை சாப்பிடும் போது, அது உடலில் வைட்டமின் ஏ சத்தானது மாறி, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாதவாறு தடுக்கும்.

K.N. அப்துல் ரசாக் செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ்.