பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி..
விருது நகர் காரியாபட்டி ஒன்றியத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி துவக்கம் காரியாபட்டி ஜன 5 காரியபட்டி ஒன்றியத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணி துவங்கப்பட்டது விருது மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு பொருட்கள்மற்றும் பரிசுத்தொகை 2,500 வழங்கும் பணி நேற்று துவங்கப்பட்டது .காரியாபட்டி அருகே ஆகியோர் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் துவக்க நிகழ்ச்சிக்கு காரியாபட்டி ஒன்றிய கழக செயலாளர் ராமமூர்த்தி ராஜ் தலைமை வகித்தார் .ஒன்றிய கழக செயலாளர் தோப்பூர் முருகன் மாவட்ட கழக அவைத்தலைவர் ஜெய பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . நிகழ்ச்சி யில் பொது மக்களுக்கு விலையில்லா பொங்கல் பொருட்கள் வழங்கும் பணி துவங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காரியாபட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த கல்குறிச்சி மாந்தோப்பு அழகியநல்லூர் கரிய னேந்தல் ஜோகில்பட்டி அல்லாளபேரி தோப்பூர் சத்திரம் புளியங்குளம் குரண்டி . வேப்பங்குளம் தேனூர் மறைக்குளம் உவர்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இலவச பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் தேம்பாவணி திருச்செல்வம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆவியூர் ரவி வேங்கை மார்பன் சுப்பிரமணியன் ஆதி ஈஸ்வரன் கார்த்திக் மாந்தோப்பு சரவணன் ஒன்றிய துணை செயலாளர் தேனூர் பாலசுப்பிரமணியம் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஆவியூர் ரமேஷ் கிருஷ்ணன் தோணு கால் வெயில் கண்ணன் தோப்பூர் ரகுபதி சீமை ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
நன்றி ராஜேந்திரன்