சூர்யாவுடன் இணையும் நடிகர் ராஜ்கிரன்!

20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுடன் இணையும் நடிகர் ராஜ்கிரன்!

சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் அவருடன் 20 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் ராஜ்கிரண் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘சூர்யா 40’ படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் இருவரும் ஏற்கனவே பாலா இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான நந்தா படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பின் சூர்யா படத்தில் ராஜ்கிரண் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.