கொப்பரை கொள்முதல் விலை திடீர் சரிவு!

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு, கிணத்துக்கடவு உள்பட பல்வேறு பகுதிகளில் தென்னை சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய்கள் பல்வேறு இடங்களுக்கு தினமும் லாரிகளில் டன் கணக்கில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மீதமுள்ள தேங்காய்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்தி களங்களில் உடைத்து காயப்போட்டு கொப்பரைகளாக மாற்றப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் தேங்காய் உற்பத்திசீசன் நிறைவடைந்த நிலையில், கடந்த சில வாரங்களாக வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை உயராமல் இருந்தது.

கடந்த சில தினங்களாக வெளிமார்க்கெட்டில் கிலோவிற்கு ரூ.6 முதல் ரூ.7 வரை சரிந்து இந்த விலையே தொடர்ந்து நீடித்து வருகிறது. தேங்காய் விளைச்சல் கடுமையாக குறைந்துள்ள நிலையில் டன்னுக்கு ரூ.7 ஆயிரம் வரை கொள்முதல் விலை சரிவால் உற்பத்தியாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்னை விவசாயிகள், உற்பத்தியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தியாளர்
தமீம் அன்சாரி
தமிழ்மலர் மின்னிதழ்