இந்தியாவில் மிக பிரம்மாண்டமான சிவன் சிலை!
கேரளா: இந்தியாவின் மிகவும் உயரமான சிவன் சிலை கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது
கேரள மாநிலம் கோவளம் கடற்கரையில் ஆழிமலை சிவன் கோவிலில் பிரமாண்ட சிவன் சிலை திறக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான சூலத்தை தாங்கி தலையில் கங்கையை சுமந்தவாறு கடற்கரையில் காட்சியளிக்கும் கங்காதரரை பொதுமக்கள் தரிசனம் செய்து செய்கின்றனர். நாட்டிலேயே மிக உயர்ந்த சிவன் சிலை பக்தர்களின் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞம் பகுதியில் உள்ள ஆழிமலா சிவன் கோயிலில் இந்த உயர்ந்த சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது
சிவன் கோயில்களில் மிகவும் உயரம் கூடிய சிவன் சிலையும், 3000 சதுர அடி அகலமும் அதனுடன் சேர்ந்து குகை தோற்றத்தில் உள்ள தியான மண்டபமும் உள்ளது. அதில் கல்லில் செதுக்கிய சிவன் சிற்பங்களும் அடங்கியுள்ளது.
கங்காதர சிவ ரூபத்தில் உள்ள இந்த சிவன் சிலையை செதுக்கும் பணி கடந்த 2014ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2020ம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. கடலில் இருந்து 20 அடி உயரத்தில் அமைந்துள்ள பாறையின் மேல் 58 அடி உயரத்துக்கு இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. தலையில் கங்கை உடன் பெரிய சூலம், உடுக்கையைக் கையில் கொண்டு அமர்ந்த நிலையில் சிவன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.