வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்!

வீரபாண்டிய கட்டபொம்மன்
262-வது பிறந்த தினம்! துணை முதல்வர் மாலை அணிவித்தார்!

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு அமைப்பினர் பேரணியாக சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர்களில் முக்கிய இடம் பெற்றவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தென் மாவட்டங்களில் மதுரையை அடுத்து தேனி மாவட்டம் போடியில்தான் கட்டபொம்மன் சிலை அமைந்துள்ளது. சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டவராக கருதப்படும் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்த தினம் தேனி மாவட்டம் போடியில் கொண்டாடப்பட்டது.

அதிமுக சார்பில் கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபன்னீர்செல்வம் போடியில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கட்டபொம்மன் சிலைக்கு நாயுடு, நாயக்கர் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் போடி, தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்களும், திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் போடிக்கு வந்து கட்டபொம்மன் பிறந்த தினத்தில் கலந்து கொண்டனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்,