ரஷ்யாவின் திட்டம்..
ரஷ்யாவின் திட்டம்
ஒரே தாக்குதலில்
பிரிட்டனை அழிக்கும் ஏவுகணை!
ரஷ்யா அரசாங்கம் 6700 மைல்கள் செல்லக்கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணையை நிறுவவுள்ளது.
ரஷ்யா சுமார் 6700 மைல்கள் தூரம் பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கக் கூடிய வகையில் பிரம்மாண்டமான ஏவுகணை RS-28 sarmat doomsday ஐ சோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 16 warhead களை சுமந்துகொண்டு ஒரு மணி நேரத்திற்கு 15000 மைல் வேகத்துடன் செல்லக் கூடிய இந்த ஏவுகணை மூலம் உலகின் எந்த ராணுவத்தையும் சமாளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இதனை ஏவினால் அமெரிக்காவின் Texas மாகாணம் முழுவதையும் அழித்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 3 warhead களை சுமந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட R-36 ஏவுகணையை மாற்றும் நோக்கில் சுமார் 200 டன்கள் எடையுள்ள இந்த RS-28 சர்மா ஏவுகணையை ரஷ்யா நிறுவ இருக்கிறது.
மேலும் இந்த ஏவுகணையானது இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா, ஜப்பானின் மீது தாக்குதலுக்கு போடப்பட்ட ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டுகளை விட 400 மடங்கு சக்தி வாய்ந்தது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏவுகணை பிரிட்டன் போன்று 2.8 மடங்கு பரப்பளவு கொண்ட நகரங்களை ஒரே தாக்குதலில் முற்றிலுமாக அழித்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.