பணபர ஸ்தானம்….!!
பணம்., பணம்.,பணம்.,
பணபர ஸ்தானம்….!!
நவீன உலகமயமாக்கல் பொருளாதார சூழலில் பணம், வரவு, லாபம், சேமிப்பு போன்ற வார்த்தைகளுக்கு மிகமிக அதிக முக்கியத்துவம் வந்துவிட்டது…
ஒருவருக்கு பணம், வருமானம், லாபம் பெற ஆதாரமாக இருக்கும் கல்வியும் இன்று வியாபாரம் ஆகிவிட்டது..,
ஏன் உதாரணமாக ஒரு மனிதனின் இறுதி சடங்கிற்கு கூட பணம் அத்தியாவசியம் ஆகிவிட்டது.
செல்வத்தை நான்கு வகைகளாக பிரித்து அதை ஒவ்வொரு ஒவ்வொரு ஸ்தானங்களாக பிரித்து தந்துள்ளனர் நமது முன்னோர்கள்…
அதாவது கேந்திர ஸ்தானங்களுக்கு
அடுத்து அடுத்து வரும் ஸ்தானங்களெல்லாம் பணபர ஸ்தானங்கள் ஆகும். பணபர ஸ்தானங்கள் ஒருவரது ஜாதகத்தில் அவரின் செல்வ வளத்தை காட்டும் ஸ்தானங்கள் ஆகும்.
ஜென்ம லக்னத்திற்கு 2,5,8,11 ஆம் ஸ்தானங்கள் பணபர ஸ்தானங்கள்
ஆன இவை..,
மனித இனத்திற்குள் பயன்படுத்தபட்ட முக்கிய ஆயுதமாக உள்ளது..
அவரவரது செல்வ வளமை, வரவு, தொழில் லாபம் உள்ளது. அதனால் தான் இதுவே கேந்திர ஸ்தானங்களுக்கு அடுத்த முக்கியத்துவம் பெற்ற ஸ்தானங்களாக உள்ளது,
ஜென்ம லக்னத்திற்கு
2ஆம் ஸ்தானம் – முதல் பணபர ஸ்தானம் ஆகும். இது ஒருவரது குடும்ப சொத்து, சேர்க்கும் பணம் ஆகும்..
ஜென்ம லக்னத்திற்கு
5ஆம் ஸ்தானம் – இரண்டாம் பணபர ஸ்தானம் ஆகும்.
இது ஒருவரது புண்ணிய பலம், உயர் கல்வி திறன், லாட்டரி, சூதாட்டம், ஆகியவற்றை காட்டும் ஸ்தானமாக உள்ளது.
ஜென்ம லக்னத்திற்கு
8ஆம் ஸ்தானம் – மூன்றாம் பணபர ஸ்தானம் ஆகும்.
இது ஒருவரது, மற்றவர்களின் பணம் உங்களிடம் சேருதல், கடனால் லாபம் பெறுதல், திருட்டு பணம், ஊழல் பணம், கருப்பு பணம்.. உதாரணமாக இன்றைய அரசியல்வாதி அனைவருக்கும் இது பொருந்தும்.
ஜென்ம லக்னத்திற்கு 11ஆம் ஸ்தானம் – நான்காம் பணபர ஸ்தானம் ஆகும்..
இது ஒருவரது லாப ஸ்தானம் அதாவது வருமானம், தொழில் லாபம், ஓய்வூதியம், வருமானம் பெற்று தரும் முதலீடுகள் போன்றவை ஆகும்.
பணபர ஸ்தானங்களின் வலிமையை, பலத்தை அறிய அந்த ஸ்தானம், ஸ்தானத்தை சேரும், பார்க்கும் கிரகங்கள், ஸ்தானாதிபதி ஸ்தான பலம், சாரம் மற்றும் குரு, சுக்கிர கிரகங்களின் வலிமை ஆகியவற்றின்
சுப பலத்தை பொருத்தே ஸ்தானத்தின் பலம் அமையும்.
Astro Selvaraj Trichy
Cell : 9842457912