உலகப் பாவை தொடர்-4
4. உண்மை உணர்வார்
உயர்வார்
தன்னைத்தாம் உணர வல்லார்
தவறிழைக்க மாட்டார்;வாழும் மண்ணைத்தாம் உணர
வல்லார்
மக்களுடன் ஒன்றி வாழ்வார்;
விண்ணைத்தாம் உணர
வல்லார்
விந்தைமிகு உண்மை
காண்பார்;
அண்டங்கள் உணர வல்லார்
அருட்பிழம்பாய் உயர்ந்து நிற்பார்;
உண்மையிதை
உணர வல்லார்
ஒருபோதும் சாவ தில்லை; எண்ணத்தை ஏணி யாக்கி ஏறுவதால் இல்லை தொல்லை
என்பதனை மக்கட் கெல்லாம் எளிதாக உணர்த்தி, அன்னார் என்றென்றும் உயரத் தொண்டு
ஏற்றுலவாய் உலக பாவாய்!
- பேராசிரியர் முனைவர்
கு. மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்