ஆன்லைன் மோசடி? மக்களே உஷார்!
ஆன்லைன் மோசடி? மக்களே
உஷார்!
ஆன்லைன் ஷோப்பிங்கில் மோசடி நடப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங் என்ற பெயரில் தற்போது ஏராளமான மோசடிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நூதன மோசடி என்னும் முறை நமக்கு புதியது கிடையாது. ஆனால் நாளுக்கு நாள் இந்த மோசடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் அப்பாவி ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுதான் அதிகரிக்கிறது. பணத்தை வாங்கிக்கொண்டு பொருளை மாற்றி கொடுத்து ஏமாற்றி வருகிறது இந்த கும்பல், அண்மைக்காலமாக இதுபோன்ற மோசடி அதிகரித்து வருகின்றது.
தேவையற்ற பொருள் என்ற போதும் அதன் மேல் இருக்கும் ஒரு நப்பாசையில் காரணமாக மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஆன்லைனில் ஷாப்பிங் செய்து வருகின்றனர் மக்கள்.
குறிப்பாக குடும்பப் பெண்களை குறி வைத்து இந்த ஆன்லைன் வியாபாரம் நடைபெறுகிறது. இதன் விளைவாக தரமற்ற பொருட்களை போலி படத்தின் மூலம் விற்பது எளிதாக நடக்கிறது. இதேபோன்று அண்மையில் ஆன்லைனில் ஒரு செல்போன் ரூ.1750 மட்டுமே என்று விளம்பரம் செய்துள்ளனர். அதை நம்பி ஆர்டர் செய்தவர்களுக்கு உள்ளே பவர் பேங்க் இருந்துள்ளது. அதுவும் தரமற்ற 200 முதல் 300 ரூபாய் கிடைக்க கூடிய ஒரு போலி பவர் பங்க்.
இதையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நெல்லை மாநகர காவல் ஆணையர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருநெல்வேலி மக்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள் கொரோனா காரணமாக நேரடி விற்பனை செய்வதாகவும், அஞ்சல்காரரிடம் பார்சலை பெற்றுக்கொண்டு பணம் மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறி பவர் பேங்க் கொடுத்து மோசடி செய்கின்றனர். எனவே மாநகர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.