ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட காளி சிலை
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் முத்தையா ஸ்தபதி என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார். பத்துக்கும் அதிகமான சிற்ப கலைஞர்களை கொண்டு 21 அடி உயரத்தில் 18 பெரிய கைகளுடன் கூடிய 40 டன் எடையுள்ள பிரம்மாண்ட காளி சிலையை செதுக்கும் பணியில் ஈடுபட்டார் ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக சிலை செதுக்கும் பணி தாமதமானது. இந்நிலையில் தற்போது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட காளி சிலை தத்ரூபமாக வடிவமைத்து முடிக்கப்பட்டது. இதனை அடுத்து இச்சிலை 5 கிரேன்கள் மூலம் லாரியில் ஏற்றப்பட்டு ஆந்திர மாநிலத்திலுள்ள பிரகாசம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.