இந்தியாவில், புதிதாக கொரோனா பாதிப்பு 18177 பேருக்கு தொற்று உறுதி..

இந்தியாவில் நேற்றுபுதிதாக கொரோனா பாதிப்பு 18177 பேருக்கு தொற்று உறுதி..
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,23,965 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் நேற்று

ஒரே நாளில் 217 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,49,435 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் நேற்று நாளில் 20,923 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99,27,310 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 2,47,220 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 17,48,99,783 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா முழுவதும் நேற்று 09,லட்சத்து 58  ஆயிரத்து 125 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

ரஹ்மான். செய்தியாளர். தமிழ் மலர் மின்னிதழ்