ஹெச்1பி விசா மீது தடை.
அமெரிக்காவிற்கு வெளிநாட்டு ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஹெச்1பி விசா மற்றும் இதர வேலைவாய்ப்பு விசாக்கள் மீதான தடையை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளார்.
டொனால்டு டிரம்ப் அரசு ஏற்கனவே விதிக்கப்பட்டு உள்ள பல்வேறு தடையின் காரணமாக இந்தியாவில் பல லட்சம் பேர் அமெரிக்கச் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில், மீண்டும் டிரம்ப் அரசு 3 மாதம் அதாவது மார்ச் மாதம் வரையில் ஹெச்1பி விசா மற்றும் இதர வேலைவாய்ப்பு விசாக்கள் மீது தடை விதித்துள்ளது.