நாட்டு மக்களுக்கு கிம் கடிதம்!
வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜான் உங் புத்தாண்டு நாளில் நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில மாதங்கள் முன்னர் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டதாகவும், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு கோமா நிலைக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து பல நாட்களாக கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நிலையில் அவர் இறந்துவிட்டதாக செய்திகள் பரவ தொடங்கியது. தென் கொரிய அதிகாரிகள் சிலர் அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும், விரைவில் அதிபர் பொறுப்பை அவரது சகோதரி ஏற்க உள்ளதாகவும் தெரிவித்து வந்தனர். ஆனால் இன்னமும் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் இன்று புத்தாண்டை முன்னிட்டு கிம் தனது நாட்டு மக்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கடினமானக் காலத்தில் என்னை நம்பிய மக்களுக்கு நன்றி. புத்தாண்டில் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற உழைப்பேன் எனக் கூறியுள்ளார்.
ரஹ்மான் செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ்