ஐநாவில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பிரான்ஸ் ஆதரவு!

பிரான்ஸ்: இந்தியாவுக்கு ஆதரவு… ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் வழங்க வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு அவையில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இவை தவிர 10 நாடுகள் இரண்டாண்டுக் காலத்துக்கு உறுப்பினராக இருக்கும்.

அதன்படி இந்தியா இன்று முதல் இரண்டாண்டுகளுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உறுப்பினராக இடம்பெறுகிறது. அது மட்டுமல்லாமல் வரும் ஆகஸ்டு மாதம் முழுவதும் ஐ.நா. பாதுகாப்பு அவைக்கு இந்தியா தலைவராக இருக்கும்.

பாதுகாப்பு அவையின் உறுப்பினராக இந்தியா நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன், இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ரமேஷ்
கொடைக்கானல் செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.