ஆங்கில புத்தாண்டில் 3.7 லட்சம் குழந்தைகள்

இந்த 2021 புத்தாண்டு தினத்தில் உலகம் முழுதும் 3.7 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் பிறந்திருக்க வாய்ப்புள்ளது. இதில் அதிகபட்சமாக இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகள் பிறந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக சீனாவில் 35 ஆயிரத்து 615 குழந்தைகளும்; நைஜீரியாவில் 21 ஆயிரத்து 439; பாகிஸ்தானில் 14 ஆயிரத்து 161 குழந்தைகள் பிறந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த 2021 ஆண்டில் மொத்தம் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டுகளாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.