பொங்கல் பரிசு ரூ.2,500/-

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500/- வழங்க டோக்கன் விநியோகிப்பு :

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2500/- மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும் என்றும் எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் முதலமைச்சர் கூறி உள்ளார்.

அதனை தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவின்படி, செங்கை மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ஊராட்சி உட்பட்ட பகுதிகளுக்கு ரேஷன் கடை பணியாளர் சூர்யா தலைமையில் நேற்று வீடு வீடாக சென்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் சிறப்பான முறையில் வழங்கப்பட்டது.

N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்