பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு

சமீபத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்கள், பிரிட்டனில் இருந்து வேறு நாடுகள் வழியாக இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் இந்தியா, இத்தாலி, பிரான்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டன் நாட்டுடனான விமான போக்குவரத்து தடை, ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 20 பேருக்கு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.